Touring Talkies
100% Cinema

Saturday, June 21, 2025

Touring Talkies

தனது 100வது திரைப்படம் குறித்த அப்டேட்-ஐ கொடுத்த நடிகர் நாகர்ஜுனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைகிறார். தென்னிந்திய திரையுலகில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற பிரபல நடிகர்களே இதற்குள் வந்துள்ளனர். தற்போது நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை தமிழ்த் திரைப்பட இயக்குநர் ரா.கார்த்தி இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், தனது 100-வது படம் குறித்து நாகார்ஜுனா தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “என்னுடைய 100-வது படத்திற்கான முன்னோட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சரியான நேரத்தில் இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,” எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, நாகார்ஜுனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகார்ஜுனா 1986ஆம் ஆண்டு “விக்ரம்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடக்கத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், தனது திறமையால் தெலுங்கு சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

- Advertisement -

Read more

Local News