மோகன்லால் நடிப்பில் எல்2 எம்புரான், தொடரும், ஹிருதயபூர்வம் உள்ளிட்ட மலையாள படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. அதேபோல், இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள விருஷபா படம் வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை சமீபத்தில் நிறைவு செய்துள்ளார் மோகன்லால்.
தயாரிப்பாளர் அபிஷேக் வியாஸ், மோகன்லாலுடன் எடுத்த புகைப்படத்துடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். நந்தா கிஷோர் இயக்கிய இப்படத்தில் நடிகை சிவரஞ்சனி மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மேகா ஸ்ரீகாந்த், முதன்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.