Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியனிடம் குத்துச்சண்டை பயிற்சி பெறும் நடிகர் மஹத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மஹத் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியன் கோயன் மசூரிடியரிடம் குத்துச்சண்டை கற்று வருகிறார். நடிப்பை தாண்டி அஜித் கார் ரேசில் புகழ்பெற்று வருவதை போன்று தானும் நடிப்பை தாண்டி குத்துச்சண்டையில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறும்போது, சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது பிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது. கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது.நடிகர்கள் தங்களுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News