தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி, 85. பாரதிராஜாவின் ‛16 வயதினிலே’ படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். செந்தில் உடன் இவர் பண்ணிய காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. அன்றைய ரஜினி, கமல் துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை நடித்து வருவதோடு ஹீரோவாகவும் அவ்வப்போது நடித்து வருகிறார்.கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67. அந்தகாலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார். கவுண்டமணி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
