Touring Talkies
100% Cinema

Wednesday, June 18, 2025

Touring Talkies

திருட்டை மையமாக வைத்து உருவாகும் ‘பிக்பாக்கெட்’ என்ற புதிய திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விதா ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், படத்தொகுப்பாளர் விஜய் தயாரித்து நடித்துள்ள படம் பிக்பாக்ட். இந்த படத்தில் கதாநாயகியாக யோகலட்சுமி நடித்துள்ளார். அவர்களுடன் பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம் ஒளிப்பதிவையும், ஷாஜஹான் இசையையும் கவனித்துள்ளனர். இப்படத்தை ஜே. எஸ். ஜூபர் இயக்கியுள்ளார்.

இந்த படம் குறித் இயக்குநர் கூறியதாவது: “ஒரே நாளின் இரவில் நடக்கும் ஒரு கதையில்தான் இப்படம் உருவாகியுள்ளது. இரவு 7 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்றவை முக்கிய பங்காக காணப்படும். சில படங்களில் மட்டும் பிக்பாக்கெட் குறித்த சில காட்சிகள் இடம்பெறும், ஆனால் அதை பெரிதாக யாரும் பேசுவதில்லை. இந்த படம் முழுமையாக பிக்பாக்கெட் குறித்ததாகவே இருக்கிறது. பிக்பாக்கெட் திருடர்களை நாம் பொதுவாக சாதாரண நபர்களாகவே எண்ணி வருகிறோம். ஆனால், அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய மாபியா கூட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கதையில் விறுவிறுப்பாக நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம்” என கூறினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆரம்பித்து வைத்தார்.

- Advertisement -

Read more

Local News