ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகதிரைப்பட பிரபல திரைப்பட நடிகர்கள் உள்பட 29 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், 2016ம் ஆண்டு ஒரு செயலிக்காக பிரமோஷன் செய்தேன். அந்த செயலி 2017ம் ஆண்டு சூதாட்ட செயலியாக மாறியது. இதையடுத்து எனது ஒப்பந்தத்தை நான் ரத்து செய்துவிட்டேன்.
ஒரு தவறை தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். எனவே இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இனி ஒருபோதும் இப்படி நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்

