Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

ராஜமெளலி – மகேஷ் பாபு படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். காடுகளை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வருகிறது.

முதலில் கும்பா என்ற கேரக்டரில் பிரித்விராஜ் நடிப்பதாக அறிவித்து அவரின் முதல் பார்வையை வெளியிட்டனர். தொடர்ந்து படத்தின் முன்னோட்ட பாடலாக ‘குளோப் ட்ராட்டர்’-ஐ வெளியிட்டனர். இதை ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார். நாளைமறுதினம் நவம்பர் 15ல் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை பிரமாண்டமான விழா வைத்து வெளியிடுகின்றனர். இதை ஓடிடியிலும் நேரலையில் ஒளிபரப்ப உள்ளனர்.

இந்நிலையில் நாயகி பிரியங்கா சோப்ராவின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அவர் மந்தாகினி என்ற கேரக்டரில் நடிக்கிறார். மலைகளுக்கு நடுவே அதிரடி ஆக்ஷன் காட்சியில் அவர் நடித்திருப்பது போன்று போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஊமை ராணியின் பெயர் இது. மேலும் ராமாயணத்தில் சொல்லப்பட்ட ஒரு நதியின் பெயரும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News