சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாகார்ஜுனா, தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு இரண்டு நாட்கள் வரை டிஜிட்டல் கைது என்ற ஒரு மோசடிக்கு ஆளானதாக கூறினார். காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் மோசடிகளை தடுப்பதில் காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் நாகார்ஜுனா கூறினார். அனைவரும் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


