Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

தெலுங்கில் ரீமேக்காகும் ‘லப்பர் பந்து’…‌ வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா ஆகியோர் நடித்த ‘லப்பர் பந்து’ வெளியாகி, பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க ஆர்வம் காட்டியிருந்தார். இதற்கிடையில், தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தெலுங்கில் ‘நின்னிலா நின்னிலா’ படத்தை இயக்கிய அனி ஐ.வி. சசி இந்த ரீமேக்கை இயக்குகிறார். இதில் அட்டகத்தி தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் ராஜசேகர் நடிக்கிறார். சுவாசிகா நடித்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், சஞ்சனா நடித்த வேடத்தில் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா நடிக்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண் நடித்த கதாபாத்திரத்திற்கு நடிகர் இன்னும் இறுதியாக தேர்வாகவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News