Touring Talkies
100% Cinema

Thursday, November 13, 2025

Touring Talkies

தனுஷின் NEEK பட கதாநாயகனான பவீஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ். தனுஷ் இயக்கிய ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கு அடுத்த படமாக பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நாக துர்கா என்பவர் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வந்ததோடு பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு ‘லவ் ஓ லவ்’ என பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் வலைதளத்தில் வெளியிட்டார். காதல் கதையில் உருவாகும் இப்படம் இன்றைய இளம் காதலர்களின் காதல், மோதலை வைத்து உருவாகிறது.

- Advertisement -

Read more

Local News