தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா, தற்போது தனது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வழக்கமாக கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, சமீபத்தில் அவர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது அவர்கள் நந்தி சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் அந்தக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினரால் மரியாதை, வரவேற்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

