தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிற நடிகை பிரியா பவானி சங்கர், சமீப ஆண்டுகளில் மிகத் தேர்ந்தெடுத்து மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுடைய திரைப்படத் தேர்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க வேண்டும் என்பதிலே எனக்கு எவ்விதக் கட்டாயமும் இல்லை அதில் உடன்பாடும் இல்லை. எல்லாவற்றையும் கதைதான் முடிவு செய்யும். கதை எந்தளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதுதான் முக்கியம். கதையின் மையம் யாராக இருந்தாலும் சரி, அந்தக் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு, அதற்குள் உயிர் இருந்தால், அதுவே வெற்றி பெறும்.
ஒரு படம் நல்ல கதையுடன் உருவாகி, தயாரிப்பாளர்கள் அதில் முதலீடு செய்த பணத்தை மீட்டுக்கொண்டால், அது ஒரு வெற்றி பெற்ற படம் என்று நான் நம்புகிறேன். சில நேரங்களில் பெரிய ஹீரோக்களின் படங்களே லாபம் தருவதில்லை, ஆனால் சில சிறிய படங்கள் ரசிகர்களிடையே பெரிய வெற்றியை அடைகிறது. அந்த வகையில், ஒரு நல்ல படம் எது என்பதை பிசினஸ் முடிவு செய்கிறது,” என அவர் தெரிவித்தார்.

