2022-ம் ஆண்டில் பிரபல நடிகை ஷிவானி ராஜசேகருக்கு ஒரு பம்பர் ஆபர் கிடைத்தது. பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க அவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. தான் அதில் பங்கேற்பதாக ஷிவானி மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, திடீரென பெமினா மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.பெமினா மிஸ் இந்தியா போட்டி நாளில், தனக்கு மருத்துவ தேர்வு இருந்ததால், போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து ஷிவானி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.


