இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதன்பின், கவின் நடிப்பில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தற்போது கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்க்’.
இந்தப் படத்தின் புரமோஷனுக்கான பேட்டியில் பேசிய நடிகர் கவின், தனது முந்தைய படங்களான ‘பிளடி பெக்கர்’ மற்றும் ‘கிஸ்’ குறித்து கருத்து தெரிவித்தார். அதில், பிளடி பெக்கர் வேறு தேதியில் வெளியாகி இருந்தால் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். ஓடிடியில் அந்தப் படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது. ‘கிஸ்’ படத்திற்கும் தயாரிப்பு தரப்பிலிருந்து மேலும் சிறிது ஆதரவு கிடைத்திருந்தால், சரியான ரிலீஸ் தேதியுடன் அது பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்று கூறினார்.

