Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

தனுஷின் ‘D54’ படப்பிடிப்பு நிறைவு… அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘இட்லி கடை’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் ‘தேரே இஷ்க் மெயின்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

மேலும், நடிகர் தனுஷ், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்திலும் நடிக்கிறார்.  வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், பரபரப்பான கதைக்களத்துடன் கூடிய ஒரு எமோஷனல் திரில்லர் ஆக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், D54 படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த பகிர்ந்தபோது, D54 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தினை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News