அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‛வீர தீரசூரன்’ வெளியாகி ஆறுமாதங்கள் ஆகின்றன. ஆனால், அதற்குப் பிறகு அவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை. முன்னதாக ‛96’ பிரேம்குமார், மடோன் அஸ்வின் உள்ளிட்ட பலரின் படங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் கூறப்படுகிறது .
விஷ்ணு எடவன், நயன்தாரா – கவின் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். மேலும், ‛மாநகரம்’, ‛கைதி’ போன்ற படங்களில் உதவியாளராகவும், ‛கைதி’, ‛விக்ரம்’ படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விக்ரம் படத்திற்கான நாயகி மற்றும் பிற முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.