தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது விஜய்யின் கடைசி படம் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்று அவரே தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதில், விஜய் சாருக்கு இது சிறந்த Farewell படமாக இருக்கும். மாஸ், கமர்ஷியல் ஆக்ஷன் இதனை எதிர்பார்த்து வாருங்கள்… full meals ஆக இருக்கும். இது பக்காவான Farewell படம் என தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.