நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் ஆகியோர் இந்தப் பாகத்திலும் தொடர்கிறார்கள். அதோடு, முதல் பாகத்தில் விருந்தினராக நடித்த சிவராஜ் குமார் மற்றும் மோகன்லாலும் மீண்டும் இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து பாலிவுட் நடிகை வித்யாபாலனும் இணைந்துள்ளார். இதனை படக்குழு ரகசியமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
வித்யாபாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகையாவார். ஆனால் தமிழில் அவர் நடித்தது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.