நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் பரதா. பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கிராமப்புறங்களில் பெண்கள் பரதா அணிவது அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு பழக்கம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
பட ரிலீஸை முன்னிட்டு அனுபமா புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய நேர்காணலில், அவர் தனது மற்றொரு படமான பைசன் குறித்து பேசுகையில், மாரி சார் முதலில் பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது நான் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். அந்த முடிவு குறித்து வருத்தமாக இருந்தது. பின்னர் மாமன்னன் படத்திலும் அழைத்தார். அப்போதும் என்னால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு பைசன் படத்திற்கு அழைத்தபோது, இந்த வாய்ப்பை விடக்கூடாது என்று உடனே ஒப்புக் கொண்டேன். இப்படம் எனக்கு நிறைய கற்றுத் தந்தது என்று தெரிவித்துள்ளார்.