தெலுங்கு திரையுலகில் நடிகர் மகேஷ்பாபுவின் குடும்பத்திலிருந்து புதிய சினிமாவுக்கு வரவாக அறிமுகமாகிறார் பாரதி கட்டமனேனி.

இவர், மகேஷ்பாபுவின் மறைந்த சகோதரர் ரமேஷ்பாபுவின் மகள் ஆவார். தெலுங்கு சினிமாவில் ரீமா சென், காஜல் அகர்வால், சதா உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் தேஜா, தனது புதிய படத்தின் மூலம் பாரதியை அறிமுகப்படுத்த உள்ளார்.
தனது புதிய படத்திற்காக குடும்ப பாங்குடன் புதியவரை அறிமுகப்படுத்த நினைத்த போது, மகேஷ்பாபு, ஸ்ரீலீலா நடனமாடிய ‘குர்ச்சி மர்த்தபெட்டி’ பாடலுக்கு பாரதி இன்ஸ்டாகிராமில் ஆடியிருந்த வீடியோ தேஜாவின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து பாரதிக்கான ஆடிஷன், லுக் டெஸ்ட் ஆகியவை சிறப்பாக முடிவடைந்துள்ளன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.