‘தில்லு ஸ்கொயர்’ திரைப்படத்தில் லில்லி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகை அனுபமா வெளியிட்ட கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எப்போதும் பாரம்பரிய வேடங்களில் மட்டுமே நடித்துவரும் அவர், இந்த படத்தில் கிளாமர் மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்ததால், அவரது ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இதனால், படம் வெளியான சமயத்தில் அனுபமாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில் தனது ‘பரதா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ‘தில்லு ஸ்கொயர்’ படத்தில் லில்லி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து அவர் மனம் திறந்தார்.
அவர் கூறியதாவது: “‘தில்லு ஸ்கொயர்’ படத்தில் நான் நடித்த லில்லி கதாபாத்திரம் என் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல, எனக்கும் பிடிக்கவில்லை. அந்த வேடத்தில் நடித்தது தவறு இல்லை, ஆனால் நான் அந்த வேடத்தில் நடிக்கக்கூடாது என நினைக்கிறேன். படத்தில் நடிக்கும் போது, ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் இருந்தது. எதிர்பார்த்தபடி விமர்சனங்களையும் பெற்றேன்” என்றார்.