Touring Talkies
100% Cinema

Thursday, August 14, 2025

Touring Talkies

தனது தங்கைகாக நடிகை ஷில்பா ஷெட்டி செய்த விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் ஷில்பா ஷெட்டி, 50 வயதிலும் ஃபிட்னஸாக இளம் நடிகைகளுக்கும் சவாலாக திகழ்கிறார். ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். அவரும் நடிகை தான். 46 வயதாகும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையில் தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார், ஷில்பா ஷெட்டி. இதனை நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘இதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை. நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்பேன். எனது தங்கைக்காக தான் இதை கேட்கிறேன் என அவர்களிடம் சொல்வேன் என்று கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News