‘கூலி’ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்துள்ளார்.

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ‘கூலி’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.