பாலிவுட்டில் வெளியாக உள்ள ‘சன் ஆப் சர்தார் 2’ படத்தின் நிகழ்ச்சியில், நடிகர் தனுஷுடன் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரும் கலந்து கொண்டார். எங்கு சென்றாலும் இருவரும் இணைந்து சென்றதால், அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக வைரலானது. இதன் காரணமாக, தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது. வடஇந்திய மீடியாக்கள் இதை பெரிதும் எடுத்துக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. ஆனால், மிருணாள் தாக்கூர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட தனது பதிவில் அவர் கூறியதாவது: “நானும் தனுஷும் நல்ல நண்பர்கள் மட்டுமே; எங்களுக்குள் வேறு எந்தவிதமான உறவும் இல்லை. ‘சன் ஆப் சர்தார் 2’ படத்தின் நிகழ்ச்சியில் தனுஷின் பங்கேற்பை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். அஜய் தேவ்கன் அவர்களே தனுஷை அழைத்து வந்தார்.
அந்த நிகழ்ச்சியில் நாங்கள் இணைந்து பங்கேற்றது தான், மற்றவர்கள் இவ்வாறு பேசுவதற்குக் காரணம். தனுஷையும் என்னையும் இணைத்து பரவி வரும் இந்தக் காதல் வதந்தியைப் பார்த்தால் எனக்கு சிரிப்பே வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.