Touring Talkies
100% Cinema

Tuesday, August 12, 2025

Touring Talkies

அரசு வாகனத்தில் பயணம்… விமர்சனங்களுக்கு நடிகை நிதி அகர்வால் கொடுத்த விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிதி அகர்வால் தமிழில் ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‛பூமி, கழகத் தலைவன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஜோடியாக ‛ஹரிஹர வீர மல்லு’ படத்தில் நடித்தார், இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி கவலையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில், ஆந்திர பிரதேச மாநிலம் பீமாவரம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு அவர் ஆந்திர மாநிலத்தின் அரசு வாகனத்தில் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இது குறித்து விமர்சனங்கள் எழுந்தது.

இதுகுறித்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நான் வந்த வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, வாகனத்தைப் பயன்படுத்துமாறு எந்த அரசு அதிகாரிகளும் என்னிடம் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News