விக்ரம் பிரபு நடிக்கும் சிறை திரைப்படத்தின் முதல் பார்வை (First Look)-ஐ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இப்படத்தை தயாரிப்பவர், விஜயை வைத்து மாஸ்டர், லியோ, மகான், காத்துவாக்குல இரண்டு காதல் போன்ற படங்களை தயாரித்த எஸ். எஸ். லலித்குமார். அவரது மகன் எல். கே. அக்ஷய் குமார், இதில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தை இயக்கியுள்ளார். ஹீரோயின்களாக அனந்தா மற்றும் அனிஷ்மா நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றியுள்ளார். தலைப்புக்கு ஏற்ப, சிறை பின்னணியில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறை என்ற பெயரில், 1984 ஆம் ஆண்டு ஒரு படம் வெளியாகி இருந்தது. அதில் ராஜேஷ் மற்றும் லட்சுமி நடித்தனர். அந்தப் படத்தில் லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு அந்தப் படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.