தன் பிரம்மாண்டமான படங்களை உலகம் முழுவதும் பிரபலமாக்கிய இயக்குநர் ராஜமவுலி, தற்போது மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் திரைப்படம் SSMB29. இப்படத்தின் தகவல் இன்று மகேஷ்பாபுவின் பிறந்த நாளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இயக்குநர் ராஜமவுலி, அந்த அப்டேட்டை நவம்பர் மாதத்தில் வெளியிடுவதாக அறிவித்தார். இருப்பினும், மகேஷ்பாபுவின் முகம் இல்லாத ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டார். அந்த போஸ்டரில், அவரின் நெஞ்சுப் பகுதி மட்டும் காணப்படுகிறது. திருநீறு, சூலம், உடுக்கை, நந்தி போன்ற சின்னங்கள் இணைந்த கருப்பு மணிகள் அவர் அணிந்துள்ளார்.

இதனால், படத்தின் நாயகன் மகேஷ்பாபு சிவபக்தனாக தோன்றுவார் என்பது தெரிகிறது. இப்படம் ஆன்மீகம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ஊகிக்கலாம். இதுகுறித்து ராஜமவுலி தனது பதிவில்,
“அன்பான இந்திய மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கும், மகேஷ் ரசிகர்களுக்கும் , நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கி சிறிது காலமாகிறது. உங்கள் ஆவலை நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம். ஆனால், இந்தப் படத்தின் கதை மற்றும் அளவு மிகப் பிரம்மாண்டமானவை என்பதால், வெறும் புகைப்படங்கள் அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகள் இதற்கு நியாயம் செய்யாது என நினைக்கிறேன். தற்போது, இப்படத்தின் சாரத்தையும், ஆழத்தையும், நாங்கள் உருவாக்கும் மாயமான உலகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது 2025 நவம்பரில் வெளியாகும். மேலும், இது முன்னெப்போதும் இல்லாத ஒரு அனுபவமாக இருக்கும். உங்கள் பொறுமைக்கு நன்றி.