நடிகர் தனுஷ் ‛போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 54வது படமாகும். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். மேலும், கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் மற்றும் மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரு அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறதாம். இந்நிலையில், இந்த படம் 1991ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் பின்னணியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.