கிங்டம் படத்தின் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஹிருதயம் லோபலா என்கிற பாடல், படத்தில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு ரொமாண்டிக் பாடல் இது.இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து தயாரிப்பாளர் நாக வம்சியிடம் கேட்கப்பட்டபோது, “இந்த படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா ? இந்த பாடலை பொருத்துவதற்கு இந்த படத்தில் எங்கே சரியான இடம் இருக்கிறது என்று சொன்னால், அங்கே இந்த பாடலை இடம்பெறச் செய்வேன். இந்த பாடலை இடம்பெறச் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அவை அனைத்தும் படத்தின் வேகத்தை குறைப்பது போல இருந்ததால் தான், படத்தில் இடம்பெறச் செய்ய முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more