தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர், இயக்குநர் கவுதம் தின்னனுரி இயக்கும் ‘கிங்டம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. ‘கிங்டம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி அறிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இப்படம் பரபரப்பான ஆக்சன் அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாகிறது.
கிங்டம் திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘கிங்டம்’ படத்திற்கு தணிக்கை வாரியத்தினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.