இயக்குனர் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு முதலில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் ஓடிசா மாநிலத்தின் கோராபுட் பகுதியில் நடைப்பெற்றது.

தற்போது இயக்குனர் ராஜமவுலி, ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியுடன் இணைந்து படத்தின் இசை பணிகளை தொடங்கியுள்ளார். அதே நேரத்தில், ஐதராபாத்திலுள்ள அலுமினியம் தொழிற்சாலையில் ஒரு பெரிய சண்டைக் காட்சிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒத்திகை செய்து வருகின்றனர்.
இந்த பெரிய சண்டைக் காட்சியை தான்சானியாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஆப்பிரிக்காவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.