பாலிவுட் நடிகை நேஹா துபியா கடந்த 15 ஆண்டுகளாக ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். முன்னணியில் இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தெலுங்கு திரைப்படங்களிலும் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு, நடிகர் அங்கத் பேடியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தையும், இரண்டு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். சமீபத்திய ஒரு பேட்டியில், திருமணத்திற்கு முன்பே தாம் கர்ப்பமாகிவிட்டதாகவும், பின்னர் திருமணம் நடைபெற்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், அங்கத் பேடியுடன் தாம் திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெற்றெடுப்பதாகவே முடிவு செய்திருந்ததாகவும், கர்ப்பமாகியவுடன் சில காரணங்களால் உடனடியாக திருமணம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு வெகு குறுகிய காலத்திலேயே கர்ப்பமடைந்ததை பற்றி அவர் வெளியிட்ட தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கர்ப்பமாக இருப்பதைத் தெரியப்படுத்து முதலில் நடிகை சோஹா அலிகான் என கூறிய நேஹா, அவரிடமும் நேரடியாக சென்று இதைத் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறினார். ஒரு முறை ரெஸ்டாரண்டில் சோஹாவும், அவரது கணவரான குணால் கெமூவும் இருக்கும்போது, திடீரென தாம் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் மருத்துவ பரிசோதனையில் தான் கர்ப்பமாக இருப்பது உறுதியானதும், அவர்களிடம் அதை பகிர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பேட்டியில் கூறியுள்ளார்