விஜய்யுடன் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்குப் பிறகு, அவரது பட்டியலில் ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’ மற்றும் அமீர்கான் நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படம் உள்ளன. அதனுடன், தனது ‘ஜிஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த புதிய திரைப்படத்தை ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷனுடன் கூடியதொரு அதிரடிப் படமாக உருவாக இருக்கிறது. இதற்காக தற்போது லோகேஷ் தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார்.. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சமயத்தில் அருண் மாதேஸ்வரன் தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை பாரத்த ரசிகர்கள் இப்படம் ஒரு முழுமையான ரத்தம் தெறிக்க ஆக்ஷன் படமாக இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.