வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரையிலான காலக்கட்டத்திற்கு தாங்கள் தயாரித்து வெளியிட இருக்கும் 10 திரைப்படங்களின் இயக்குனர்களின் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, பிரேம் குமார், அருண்ராஜா காமராஜ், ஜூட் ஆண்டனி ஜோசப், விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு, கணேஷ் கே பாபு ஆகியோர் இயக்கும் பல வகையான திரைப்படங்கள் இடம்பெறுகின்றன.
இந்தப் படங்கள் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா மற்றும் விஷ்ணு விஷால் உட்பட மேலும் பல நடிகர்கள் நடிப்பில் உருவாகவுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது, இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த புதிய அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது. வலிமையான, ஆழமான கதைகள் கொண்ட படங்களாகும். இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறோம். இந்த படங்கள் பல்வேறு தளங்களிலும், மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.