தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர் சூர்யா, தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒன்று ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘கருப்பு’ என்ற படத்திலும் மற்றொரு படம் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் சூர்யாவையும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ எனும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பதும் அந்த கதாபாத்திரத்தை தனியாக கொண்டு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.