Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘எப் 1’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘டிரோன் லெஜன்சி’, ‘ஓபிலிவியன்’, ‘ஒன்லி தி பிரேவ்’, ‘டான் கன் மார்வெரிக்’, ‘டுவிஸ்ட்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜோசப் கொஸ்ன்ஸ்கி, தற்போது இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘எப் 1’ (பார்முலா 1). இதில் பிராட் பிட், டாம்சன் இத்ரிஸ், கெரி கான்டன், ஜாவீர் பார்டெம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஆப்பிள் ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது.

பார்முலா ஒன் கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 16ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான இந்த திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது, இந்த படம் இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்தியாவில் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. 

3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் இப்படம் திரையிடப்படுகிறது. குறிப்பாக, இந்த படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்கே ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News