தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘குபேரா’ படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘குபேரா’ படம் தனுஷின் 5வது 100 கோடி வசூல் படமாகும். தமிழில் தனது திரையுலக பயணத்தை தொடங்கியதாலும் பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், தனுஷின் முதல் 100 கோடி படம் ஹிந்தியில் வெளியான ‘ராஞ்சனா’ (2013) ஆகும்.
தமிழில் முதல் முறையாக 100 கோடியை எட்டிய படம் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகும். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டு 2023ல் வெளியான ‘வாத்தி’ படம் 100 கோடியைத் தாண்டியது. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.இப்போது, கடந்த வாரம் வெளியான ‘குபேரா’ படம் தனுஷின் ஐந்தாவது 100 கோடி கிளப் படமாக அமைந்துள்ளது. வரவிருக்கும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறிப்பாக தெலுங்கு திரையரங்குகளில் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.