இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘தடையறத் தாக்க’ திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக தமன் பணியாற்றியிருந்தார். எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ‘பூந்தமல்லி டா’ பாடல் இன்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

திரில்லர் வகை படங்களில் ஒரு முக்கிய படமாக கருதப்படும் இந்த படம், இப்போது நவீன தொழில்நுட்பங்களில் மேம்படுத்தப்பட்டு ஜூன் 27ஆம் தேதி மீண்டும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் கதை, தனது வாழ்நாளில் பல பிரச்சினை சந்தித்து முன்னேறிய ஒரு இளைஞன், ஒருவருக்கு உதவ முனைந்தபோது, தவறுதலாக பெரிய ரவுடிக் கூட்டத்துடன் சிக்கிக் கொள்கிறான். பின்னர் அவன் அந்த சூழலிலிருந்து தப்பிக்கிறானா இல்லைய் என்பதே இப்படத்தின் மையக்கரு.
தற்போது, இப்படம் நவீன ஏஐ தொழில்நுட்பம் கொண்டு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, 4K தரத்துடன், அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்பில் புதிய டிஜிட்டல் பதிப்பாக மீண்டும் ரீ ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.