Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்-ஐ பாராட்டிய நடிகர் நானி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர் மற்றும் பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம், தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவையும் உணர்வும் கலந்து படம் பதிவு செய்கிறது. இப்படத்தை பார்வையிட்ட பல திரை பிரபலங்கள், படக்குழுவை பாராட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரில் சந்தித்து பாராட்டியிருந்தார். தற்போது, நடிகர் நானியும் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை மிகுந்த நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News