Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

‘மெட்ராஸ் மேட்னி’படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தில், காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானதுடன், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரு நடுத்தர குடும்ப மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரஸ்யம் எங்கு இருக்கிறது என்ற கேள்வியை முன்வைத்து, நம் அனைவரின் உண்மை கதையை பிரதிபலிக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவை பாராட்டியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “இப்படத்தை பார்த்தேன்; மிகவும் பிடித்திருந்தது. காளி வெங்கட் அண்ணாவின் எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக ‘கூலி’ திரைப்படம் மூலம் அவரை மேலும் நன்கு புரிந்துகொண்டேன். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுங்கள். இப்படித்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து உருவாகும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News