மோகன்லால் தனது ரசிகர்களுக்காக ஒரு அற்புதமான விஷயத்தை செய்துள்ளார். கடந்த 2013ல் சித்திக் இயக்கத்தில் தான் நடித்த ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்’ என்கிற படத்தை தற்போது தனது ஆசிர்வாத் சினிமாஸ் யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் மோகன்லால். ரசிகர்கள் இதை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்த்து ரசிக்கலாம். இந்த படத்தில் மோகன்லாலுடன் பிரியாமணி, பத்மப்ரியா, மம்தா மோகன்தாஸ் மற்றும் மித்ரா குரியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
