Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

‘துருவ நட்சத்திரம்’திரைப்படம் எப்போது வந்தாலும் மக்களுக்கு பிடிக்கும் – நடிகை சிம்ரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் நடித்துள்ள மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படமாக ‘துருவ நட்சத்திரம்’ இருக்கிறது. இந்தப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரீத்து வர்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

7 வருடங்களுக்கு மேலாக இப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றிச் சிம்ரன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், துருவ நட்சத்திரம் ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படம். அதே நேரத்தில் மிகவும் ஸ்டைலான படமும் இது. அந்தப் படத்தின் வெளியீட்டுக்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். சரியான நேரத்தில் படம் வெளியாகும் என்று நம்புகிறேன். மக்கள் இந்தப் படத்தை நிச்சயமாக விரும்புவார்கள் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News