இசைஞானி இளையராஜாவின் பேரனான யத்தீஸ்வர் தற்போது இசையமைப்பாளராகும் வழியில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இன்று (ஜூன் 8) திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “ஓம் நமச்சிவாய” என்று தொடங்கும் பக்தி இசை ஆல்பத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் மகன் யத்தீஸ்வர், திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில், தன் முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.
யத்தீஸ்வர் இதுகுறித்து கூறியபோது, எனக்கு சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆழமான ஆர்வம் இருந்தது. எனது முதல் பாடல் பக்திப் பாடலாக இருக்க வேண்டும் என எண்ணினேன். இந்த பாடலை உருவாக்கும் பொழுது சில ஆலோசனைகளை தாத்தா இளையராஜாவிடம் கேட்டேன். அவர் ஆர்வத்துடன் வழிகாட்டினார். என் அப்பா கார்த்திக்ராஜா பாடலின் வரிகளில் உதவினார். எனக்கும் திரைப்பட உலகில் இசையமைக்க ஆர்வம் உள்ளது. நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.