Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படத்தில் கதாநாயகியாக, ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகி, குடும்ப கதையில் மக்களைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

திருமணம் தாமதமாகும் நிலையில், ஒருவர் தனது குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் குழப்பங்களை மையமாகக் கொண்டு இந்த ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் வருகிற மே 27ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News