சென்னையில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நேற்று மாலை அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் 50வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ரசிகர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியடைந்தனர். இந்த விழாவில் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இந்த படம் நல்ல லாபம் பெற்றதாக கூறப்படுகிறது. 50வது நாள் விழாவும், 100வது நாள் விழாவும் பெருமையுடைய நிகழ்வுகளாக இருப்பதால், படக்குழுவினர் 50வது நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க விரும்பும் நம்பிக்கையுடன் இயக்குனர் ஆதிக்கும் விழாவில் கலந்துகொண்டார். “என்னை யாரும் நம்பாத நேரத்தில், என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த அஜித் சாருக்கு நன்றி,” என அவர் தெரிவித்துள்ளார்.