தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அறிமுகத்தை பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விளம்பரப் பட இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகையான மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் வரவிருக்கும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் க்ளிம்ப்ஸை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அந்த கிளிம்ப்ஸ் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.