“புஷ்பா 2” மற்றும் “டக்கு மகாராஜ்” போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை திவி வாத்யா, மக்கள் ஒருபோதும் முழுமையாக திருப்தி அடைய மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த அவர், “மக்கள் எப்போதும் முழுமையான திருப்தியை அடைய மாட்டார்கள். நமக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை ஒரே ஒரு தடவைதான். அதனால், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பெரிதாக எண்ணாமல், அதைச் சின்ன சிக்கல்களாக கருதி, நிம்மதியாக முன்னேறவேண்டும். சிலர் பணத்துக்காக வாழ்கிறார்கள், சிலர் புகழுக்காக ஓடுகிறார்கள், மற்றவர்கள் நட்சத்திர அந்தஸ்தைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் என்னைப் போன்ற சிலருக்கு, வாழ்க்கையில் முக்கியமாக வேண்டியது அன்பு மட்டும்தான்.
ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் விஷயங்களை செய்வதையே தொடர்ந்து செய்ய வேண்டும். அதே நேரத்தில், அந்த பயணத்தில் சந்தோஷத்தை அனுபவிக்க மறக்கக் கூடாது,” என தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். திவி வாத்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களைப் பகிர்வதுடன், அவற்றுடன் தனது எண்ணங்களையும் பதிவு செய்து வருகிறார்.