தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இதில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்றன. அந்த படப்பிடிப்பு வேலைகள் முடிந்தது, இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் , இப்படம் எப்போது வெளியாவது என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து எழுந்தது. இச்சமயத்தில் இன்று தயாரிப்பு நிறுவனம் இந்த ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறியுள்ளது.