தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா. இவர் தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு “கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ‘கேங்கர்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் “குப்பன்” என்ற பாடலுக்கு கவர்ச்சியான நடனமாடியிருந்தார். இந்நிலையில், தற்போது கவர்ச்சி நடிகை என்ற ஓர் பட்டத்தில் தான் சிக்கிக் கொண்டிருப்பதாக நடிகை கேத்ரின் தெரசா கூறியுள்ளார். அவர் தனது பேட்டி ஒன்றில், “படங்களில் ஒரு நடிகையாக எனது திறமையை குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. பல்வேறு மொழிகளில், பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன் என்றாலும், எனக்கு ‘கவர்ச்சி நடிகை’ என்ற சாயல் மட்டுமே சேர்ந்துவிட்டது.
அந்த ஒரு டேக்கில் இருந்து விலகி எனது திறமையை வெளிப்படுத்த வேண்டுமானால், அதற்கான வாய்ப்புகள் இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதைவிட, மற்ற கதாபாத்திரங்களில் நான் அதிகம் பங்களிக்க கூடியவளாக இருக்கிறேன் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.