தமிழ் திரைப்பட உலகில் தற்போது காமெடி நடிகராக மட்டுமன்றி கதாநாயகனாகவும் வெற்றிகரமாக நடித்து வருபவர் யோகி பாபு. நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, இப்படத்தில் தனது பங்கு நிறைவு செய்துள்ளார். இப்படம் வரும் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
இதனையடுத்து, விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு லேடி கெட்டப்பில் நடித்திருப்பதோடு, அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.